Vimarsagan Media

Home » Malaysia » புரிந்துணர்ந்து அனுசரிக்கும் போது நல்லிணக்கம் மலர்கிறது-!

புரிந்துணர்ந்து அனுசரிக்கும் போது நல்லிணக்கம் மலர்கிறது-!

உணர்ச்சிகள், சினமடைதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் உறவுகளை உடைத்து, நாட்டின் பன்முக சமூகத்திற்குள் நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நினைவூட்டினார். அன்வார் தனது சீனப் புத்தாண்டு செய்தியில், இத்தகைய வேறுபாடுகளை களைத்து நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், எதிர்மறைகளை நிராகரிக்கவும், சுபீட்சத்தை பாதுகாக்க உரையாடல், பேச்சுவார்த்தை மற்றும் ஞானத்தின் பாதையைத் தேர்வு செய்ய வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

“சீனப் புத்தாண்டு எப்போதும் செழிப்பு, நம்பிக்கை மற்றும் முன்னேறுவதற்கான வலிமையை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த குதிரை ஆண்டில், ஞானம் மற்றும் மிதமான தன்மையுடன் செயல்படுவதற் கான அழைப்போடு விடாமுயற்சி, தைரியம் மற்றும் உந்துதல் மனப்பான்மை ஆகியவை கொண்டாடப்படுகின்றன.

“மக்கள் ஒருவரையொருவர் மதித்து புரிந்துகொள்ளும்போது நல்லிணக்கம் எழுகிறது என்பதை கன்பூசியஸ் நமக்கு நினைவூட்டுகிறார். கலாச்சார பின்னணி மற்றும் நம்பிக்கைகளில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பல இன சமூகம் அமைதியாக ஒன்றாக வாழ உதவும் அடித்தளம் இதுதான்,” என்று அவர் ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

Scroll to Top