சிரம்பான்,தாமான் செனாவாங் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டிற்குள் பட்டாசுகளை வீசியதாக சந்தேகிக்கப் படும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிரம்பான் காவல்துறைத் தலைவர் அசாஹர் அப்துல் ரஹீம் நேற்று பிற்பகல் 1.45 மணிக்கு புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
“இந்த சம்பவம் பிப்ரவரி 14 அன்று இரவு சுமார் 8.12 மணியளவில் நடந்ததாக ஆரம்ப விசாரணையில் கண்டறியப் பட்டது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு முதியவரின் வீட்டிற்குள் பட்டாசு களை வீசுவது சிசிடிவி காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்திருந்ததற்காக அல்லது பயன் படுத்தியதற்காக வெடிபொருள் சட்டம் 1957 இன் பிரிவு 8 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.




