Vimarsagan Media

Home » Malaysia » ஏடிஎம் இயந்திரத் திரையை சேதப்படுத்துவது வாடிக்கை!

ஏடிஎம் இயந்திரத் திரையை சேதப்படுத்துவது வாடிக்கை!

ஜின்ஜாங்கைச் சுற்றியுள்ள பல வங்கிக் கிளைகளில் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களின் (ATM) திரைகளை தீங்கிழைக்கும் வகையில் உடைத்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர், இதன் விளைவாக RM64,000 இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

நேற்று வரை 12 ATM திரைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக ஐந்து புகார்கள் வந்துள்ள தாகவும் செந்தூல் காவல்துறைத் தலைவர் பாஸ்ரி சகோனி தெரிவித்தார். ஜின்ஜாங் செலாத்தானில் உள்ள ஒரு வங்கிக் கிளையிலும், ஜின்ஜாங் உத்தாராவில் உள்ள இரண்டு வங்கி களிலும் இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

“முதல் சம்பவம் பிப்ரவரி 16 அன்று ஒரு வங்கி தொழில்நுட்ப வல்லுநரால் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட போது நான்கு ஏடிஎம் இயந்திரத் திரைகள் விரிசல் அடைந்ததைக் கண்டறிந்த பின்னர் தெரிவிக்கப்பட்டது.

“பிப்ரவரி 17 அன்று மதியம் 12.24 மணி முதல் இரவு 10.16 மணி வரை, ஏடிஎம் இயந்திரத் திரைகளை உடைத்த தீங்கிழைக்கும் சம்பவங்கள் தொடர்பாக மேலும் நான்கு புகார்கள் வந்தன,

சந்தேக நபரின் செயல் முறை வங்கி கவுண்டருக்குள் நுழைந்து கல் போன்ற சந்தேகிக்கப்படும் பொருளைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத் திரையை உடைத்து தப்பிச் செல்வதாகும் என்று அவர் கூறினார்.

Scroll to Top