சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்க சிறப்புப் பயணமாக மலேசியா வந்தடைந்தார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் 1 இல் மாலை 4.05 மணிக்கு வணிக விமானத்தில் வந்திறங்கிய வோங் மற்றும் அவரது குழுவினர், கேப்டன் ஜாட் ஐமன் மாட் ரிபின் தலைமையில் முதல் பட்டாலியன் ராயல் ரேஞ்சர் ரெஜிமென்ட்டால் வழங்கப்பட்ட மரியாதையைப் பெற்றனர்
.பிரதமரின் தலைமைத் தனிச் செயலாளர் டத்தோ ஷாரோல் அனுவர் சர்மான் மற்றும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் உயர்தூதர் வேனு கோபால மேனன் ஆகியோர் விமான நிலையத்தில் வோங்கை வரவேற்றனர்.
கடந்த டிசம்பரில் நடைபெற்ற தலைவர்களின் ஓய்வுநாளின் முடிவுகள் உட்பட, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதிப்பார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சு நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மலேசியாவின் அண்டை நாடு மற்றும் ஆசியானில் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) முக்கிய பங்காளியாகும், பல்வேறு துறைகளில் நெருக்கமான மற்றும் விரிவான உறவுகளைக் கொண்டுள்ளது.




