ஜொகூர், செகாமட்டில் போக்குவரத்து சிக்னல் சந்திப்புக்கு அருகிலுள்ள வடிகாலில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.
காலை 11.40 மணியளவில் பொதுமக்கள் ஒருவரால் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்தப் பெண் 60 வயதுடையவர் என்று நம்பப்படுகிறது என செகாமட் காவல்துறைத் தலைவர் ஜுமசான்சாஹிர் செக் இஸ்மாயில் கூறினார். அவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லை என்றும் கூறினார்.
மேலும், எந்தவிதமான எதிர்மறை நடத்தைக்கான அறிகுறிகளும் இல்லை. மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனைக்காக செகாமட் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, ”என்று அவர் கூறினார், பிரேத பரிசோதனை முடிவுகள் வரும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.




