Vimarsagan Media

Home » Malaysia » தீ விபத்தில் ஐந்து குடும்ப உறுப்பினர் கருகி உயிரிழப்பு

தீ விபத்தில் ஐந்து குடும்ப உறுப்பினர் கருகி உயிரிழப்பு

ரவூப், கம்போங் பமா கூலாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கருகி உயிரிழந்தனர்.

தீ விபத்து குறித்து அதிகாலை 3.35 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

தீ அணைக்கப்பட்ட பிறகு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன,” என்று அவர் தெரிவித்தார்.

ரவூப் மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் ரஸாம் தாஜா ரஹீம் ஒரு அறிக்கையில், தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 4.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து அதிகாலை 4.48 மணிக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

Scroll to Top