இந்தியச் சமூகத்தினரிடையே நீண்டகால அதிகாரப் பத்திரப் பதிவு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில் இந்து அறக்கட்டளை வாரியமும் ( சிங்கை) பொதுக் காப்பாளர் அலுவலகமும் இணைந்து சிறப்புப் பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
எதிர்பாராத விதமாக ஒருவர் தமது சிந்தனைத்திறனை இழக்கும்போது, அவரது மருத்துவ, நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க 21 வயதிற்கு மேற்பட்ட, அவரது நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும் நம்பிக்கையான ஒருவரை முன்கூட்டி நியமிப்பதே இந்த நீண்டகால அதிகாரப் பத்திரம் என இந்து அறக்கட்டளை வாரியத்தின் சமூக சேவைக்குழுத் தலைவரும் வழக்கறிஞருமான திருவாட்டி சுசிலா கணேசன் விளக்கினார்.
உயில் என்பது மரணத்திற்குப்பின் செயல்பாட்டிற்கு வரும். ஆனால், நாம் உயிருடன் இருக்கும்போதே, நாமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இந்தப் பத்திரம் கைகொடுக்கும்,” என்று அவர் விளக்கினார்.-செய்தி தமிழ் முரசு




