Vimarsagan Media

Home » Malaysia » ஹரி ராயா முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்

ஹரி ராயா முன்னிட்டு பினாங்கு படகுச் சேவை மலேசியர்களுக்கு இலவசம்

ஹரி ராயா ஐடில்பிட்ரியின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில், சுல்தான் அப்துல் ஹலீம் மற்றும் ராஜா துன் ஊடா முனையங்களிலிருந்து இயக்கப்படும் பினாங்கு படகு சேவைகள் அனைத்து மலேசியர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த இலவசப் படகுப் பயணங்கள், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில், பொதுப் பயணத்தை எளிதாக்கு வதற்காக, பினாங்கு துறைமுக ஆணையமும் பினாங்கு துறைமுக நிறுவனமும் (PPSB) இணைந்து கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன என்று பினாங்கு துறைமுக ஆணையத் தின் (SPPP) தலைவர் யோ சூன் ஹின் கூறினார்.

“இந்த இலவசப் படகுச் சேவையானது பினாங்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, மேலும் நிலையான மற்றும் திறமையான பொதுப் போக்குவரத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

Scroll to Top