Vimarsagan Media

Home » Malaysia » கேட்டரிங் மற்றும் பேஸ்ட்ரி தொழில் முனைவோர் மோசடி எச்சரிக்கை

கேட்டரிங் மற்றும் பேஸ்ட்ரி தொழில் முனைவோர் மோசடி எச்சரிக்கை

பண்டிகைக்கால உணவு ஆர்டர்கள் தொடர்பான மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கேட்டரிங் மற்றும் பேஸ்ட்ரி தொழில்முனைவோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பேராக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள இழப்புகள் RM300,000-ஐத் தாண்டியுள்ளது.

இந்த மோசடியில், சந்தேக நபர்கள் வாடிக்கையாளர்களாக நடித்து, குக்கீஸ் மற்றும் பண்டிகைக்கால உணவுகள் போன்ற ஹரி ராயா இனிப்புகளுக்கு மொத்தமாக ஆர்டர் செய்வதாக பேராக் காவல்துறைத் தலைவர் கம் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார்.

“சந்தேக நபர் ஒரு குறிப்பிட்ட அளவு உணவுப் பொருட்களுக்கு முன்பதிவு செய்து, அவற்றைத் தயாரிக்க வணிக உரிமையாளருக்கு அவகாசம் கொடுப்ப தில் இருந்து இந்த மோசடியின் செயல் முறை தொடங்குகிறது.

“பின்னர், சந்தேக நபர் மீண்டும் கேட்டரிங் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, பொதுவாக அந்த நிறுவனத்தின் திறனுக்கு அப்பாற்பட்ட கூடுதல் பொருட் களைக் கேட்பார்.

“அந்தப் பொருளைத் தங்களால் வழங்க முடியாது என்று உரிமையாளர் கூறும்போது, ​​சந்தேக நபர் மற்றொரு தொடர்பு எண்ணைக் கூறி, அந்த நபர் உதவ முடியும் என்று சொல்வார்,” என்று அவர் இன்று இங்குள்ள கிராமப்புற மாற்ற மையத்தில் ஹரி ராயாவை முன்னிட்டு “ஆப்ஸ் செலாமத் 26” தொடங்கப்பட்ட பிறகு செய்தியாளர் களிடம் கூறினார்.

பரிந்துரைக்கப்பட்ட தொடர்பு நபரை அணுகும் பாதிக்கப்பட்டவர்கள், கூடுதல் பொருட்களுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தப்படுகிறார்கள் என்று ஆணையர் நூர் ஹிசாம் கூறினார்.

Scroll to Top