Vimarsagan Media

Home » Malaysia » தண்டவாளங்களில் மின் தடை மாலையில் ரயில் சேவைகள் தடை

தண்டவாளங்களில் மின் தடை மாலையில் ரயில் சேவைகள் தடை

கெலானா ஜெயா எல்ஆர்டி (LRT), கோலாலம்பூர் மோனோரயில் மற்றும் காஜாங் எம்ஆர்டிரயில் (MRT) வழித்தடங்களில் சேவைத் தடைகள் ஏற்பட்டுள்ளன. மாலை 6.10 மணிக்கு, மோசமான வானிலை காரணமாக கிளென்மாரி மற்றும் ஆரா டாமன்சாரா இலகுரக ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் மின் தடை ஏற்பட்டதாக ரேபிட் கேஎல் (Rapid KL) அறிவித்தது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக மாற்றுப் பொதுப் போக்குவரத்து சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.மாலை 6.35 மணிக்கு, பழுதுபார்க்கும் பணிகள் நிறைவடைந்து, சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், மாற்றுச் சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் ரேபிட் கேஎல் அறிவித்தது. “கால அட்டவணை சரிசெய்யப்பட்டு வருகிறது, மேலும் ரயில் சேவைகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், உங்கள் பொறுமைக்கு நன்றி,” என்று அது தனது முகநூல் பதிவில் கூறியது.

Scroll to Top