Vimarsagan Media

Home » Malaysia » செராஸ் பொழுதுபோக்கு மையத்தில் கலவரம்:- போலீஸ் தேடும் வேட்டையில்!

செராஸ் பொழுதுபோக்கு மையத்தில் கலவரம்:- போலீஸ் தேடும் வேட்டையில்!

இங்குள்ள செராஸ் பகுதியில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு நடந்த நாசவேலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒருகுழுவினரை காவல்துறை தேடி வருகிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ், இந்தச் சம்பவம் குறித்து இரவு 7.30 மணிக்குத் தமக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

மதியம் சுமார் 1.30 மணியளவில், சம்பந்தப்பட்ட குழு ஒன்று லாரியைப் பயன்படுத்தி அந்த வளாகத்தின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.”பின்னர் அவர்கள் பொழுதுபோக்கு மையத்திற் குள் புகுந்தனர்.”சந்தேக நபர்கள் வளாகத்தில் இருந்த பொருட்களை உடைத்து நாசவேலையும் செய்தனர்.

“அதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் நாங்கள் தீவிரமாகத் தேடி வருகிறோம்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427 மற்றும் ஆயுதங்களுடன் கலவரம் செய்ததற்கான அதே சட்டத்தின் பிரிவு 148 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப் பட்டு வருகிறது. “இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

Scroll to Top