இவ்வாண்டு, லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கத்தினர் தமிழ் எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், எழுத்தாளர்களின் பெயரோடு அவர்களின் படங்கள் இடம்பெற்ற பதாகைகள் (பேனர்) சிங்கப்பூர்
சிராங்கூன் சாலை – லிட்டில் இந்தியா கடைத் தொகுதியில் வைத்துள்ளனர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் இதனை முன்னெடுத்த லிஷா அமைப்பிற்கும் அதன் இலக்கிய மன்றத்திற்கும் நன்றி என எழுத்தாளர் எம் சேகர் பெருமிதம் கொள்கிறார். இதோ (என் படம் போட்ட பதாகை, லிட்டில் இந்தியா கடைத் தொகுதி வளாகம் – சிராங்கூன் ரோடு / கல்ஃப் லேன் சந்திப்பு அருகில் அழகாக அலங்கரித்துக் கொண்டிருக் கிறது என தனது முகநூலில் பதிவு் செய்துள்ளார் எம். சேகர்.




