Vimarsagan Media

Home » Malaysia » புகைப்படத் தரகர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அனுமதி வழங்காது :-ஹன்னா

புகைப்படத் தரகர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அனுமதி வழங்காது :-ஹன்னா

கோலாலம்பூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் செயல்படும் ‘உலாட் போட்டோ’ (புகைப்படத் தரகர்கள்) எனப்படும் நபர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அனுமதிகளை வழங்காது என்று பிரதமர் துறை கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவுக்குப் பின்னால், குறிப்பாக சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளே காரணம் என்று அவர் கூறினார்.

” ஏனெனில், அந்தச் சந்திப்பு புகைப்படம் எடுப்பதற்குப் பாதுகாப்பானதாக இல்லை. எனவே, அனுமதிகள் வழங்கு வது குறித்து எங்களால் பரிசீலிக்க முடியாது,” என்று இன்று இங்கு நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு பத்திரிகையிடம் அவர் கூறினார்.

சட்டவிரோத புகைப்படக்காரர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) அந்த இடத்தில் கூடுதல் மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) கேமராக்களை நிறுவியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Scroll to Top