Vimarsagan Media

Home » India » சுஜாதா மோகன் குரல்,அர்ப்பணிப்பு – அது ஒரு பள்ளி மாதிரி:- ரிஹானா

சுஜாதா மோகன் குரல்,அர்ப்பணிப்பு – அது ஒரு பள்ளி மாதிரி:- ரிஹானா

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர்களுள் சுஜாதா மோகனும் ஒருவர். இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பாடி தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை தொட்ட பாடகி ஆவார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகில் பயணம் செய்த அவர், 20,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்

சுஜாதா மோகன் என்ற பெயர் கேட்டதும் நமக்கு “புது வெள்ளை மழை”, “நெஞ்சுக்குள் போதும்”, “மலர்களே மலர்களே” போன்ற பல ஹிட் பாடல்கள் நினைவிற்கு வரும். இப்படி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சுஜாதா சொன்ன விஷயம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாடகி சுஜாதா தனக்கு தொண்டையில் பிரச்சனை என்றும் அதனால் பழைய மாதிரி பாட முடியவில்லை என்றும கூறினார.

மேலும், கடந்த 5 ஆண்டுகளாக தான் பாடவில்லை என்ற உண்மையை பகிர்ந்தார். இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரிஹானா, சுஜாதா மோகனை பற்றி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது,”என்னுடைய அம்மா இப்போ இருந்திருந்தா, சுஜாதாவுக்காக பிரார்த்தனை செய்து கண்டிப்பாக சரி செய்திருப்பார். அவர்களுக்கு சுஜாதா மீது அவ்வளவு பாசம். இந்த வீடியோவை பார்க்கும் மருத்துவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து சுஜாதாவுக்கு உதவுங்கள். அந்த குரல் மீண்டும் வர வேண்டும்.

நான் முதல் முறையாக சுஜாதாவுடன் கோரஸ் பாடினேன். அப்போது எனக்கு சரியாக பாடவே தெரியாது. ஆனாலும் அவரைப் பார்த்து தான் நான் கற்றுக்கொண்டேன். அவரோட குரல், அவரோட அர்ப்பணிப்பு – அது ஒரு பள்ளி மாதிரி என்று கூறினார்.

Scroll to Top