Vimarsagan Media

Home » Malaysia » பிறருடைய போலி மைகார்ட் அட்டை பயன்படுத்திய 46 வெளிநாட்டினர் கைது

பிறருடைய போலி மைகார்ட் அட்டை பயன்படுத்திய 46 வெளிநாட்டினர் கைது

தேசியப் பதிவுத் துறை (NRD) நடத்திய ஒரு நடவடிக்கையில், பிறருடைய போலி மை கார்ட் அட்டையைப பயன்படுத்திய தற்காக, பெரும்பாலும் இந்தோனேசியர் கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர் களான மொத்தம் 46 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

20 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்த ஆண்கள், இங்குள்ள கிள்ளான் புக்கிட் ராஜா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் NRD நடத்திய ‘ஆபரேஷன் ரோடா’ நடவடிக்கையின் போது இந்தக் குற்ற த்தைச் செய்ததை ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 23 வயதான ஃபைஸா என்ற இந்தோனே சியப் பெண்ணும் அடங்குவார். அவர், தொழிற்சாலையில் வேலை பெறுவதற்காகப் பிறருடைய MyKad அட்டையைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.

“எங்கள் முகங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்ததால், என் அத்தை மகளின் நண்பரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி நான் வேலைக்கு விண்ணப்பித்தேன் என்று கூறினார்

21 வயதான அஸ்மான், தனக்குத் தெரிந்த ஒருவரிடம் இருந்து RM500-க்கு வாங்கிய ஒரு போலி MyKad அட்டையை, மலேசியா வில் சட்டவிரோதமாக வேலை தேடுவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறினார்.

இதற்கிடையில், NRD அமலாக்கப் பிரிவின் இயக்குநர் மஸ்ஹத் அப்துல் அஜீஸ், தொழிலாளர் வழங்குநரிடம் முழுமையாகச் சரிபார்க்காத முதலாளியின் அலட்சியமும் இந்த விவகாரத்திற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று கூறினார்.

Scroll to Top