Vimarsagan Media

Home » India » தவெக ஆட்சிக்கு ஆதரவு : இன்று கடிதம் தருகிறது காங்கிரஸ்

தவெக ஆட்சிக்கு ஆதரவு : இன்று கடிதம் தருகிறது காங்கிரஸ்

சென்னை: 234 எம்எல்ஏக்களை கொண்ட தமிழக சட்டசபையில் அரசு அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை எட்ட, இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ள தவெக தலைவர் விஜய்க்கு, காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.

இன்று (மே 06) ஆதரவு கடிதத்தை விஜய் வசம் காங்கிரஸ் கொடுக்க உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக, 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க, 118 இடங்கள் தேவை என்பதால், விஜயால் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதற்காக, இரு கூட்டணிகளிலும் உள்ள பல்வேறு கட்சிகளை விஜய் அணுகியுள்ளார்.

இந்த சூழலில் தேஜ கூட்டணியில் இணைய கூடாது என்ற நிபந்தனையுடன் விஜய்க்கு, காங்கிரஸ் கட்சி வழங்க முன்வந்துள்ளது. காங்கிரஸின் ஐந்து எம்எல்ஏக்களுக்கு இன்று ஒரு கடிதம் மூலம் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று அக்கட்சி மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையை புதிய அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின், தவெகவுடன் தனது கட்சியுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், மற்றொரு அதிமுக தலைவர் தவெகவிற்கு ஆதரவளிக்கும் வாய்ப்பை முற்றிலுமாக நிராகரித்தார்.

108 இடங்களில் வெற்றி பெற்ற தவெகவின் பலம், விஜய் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டசபை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பிறகு 107ஆகக் குறையும். அப்போது, ​​233 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அவருக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும். விஜய் ஆட்சி அமைக்க தமிழக கவர்னர் ஆர்லேகருக்கு ஒரு கடிதம் அனுப்பி ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.வரும் மே 7ல் பதவியேற்பு விழாவுக்குத் திட்டமிட்டுள்ளார்.

பதவியேற்பு விழா ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளத்தில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் ஆகியோருக்கு விஜய் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமலர்

Scroll to Top