தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (TVET) மேம்படுத்து வதற்கும், வீரர்களுக்கான தொழில் பாதைகளை விரிவுபடுத்துவதற்கும், பாதுகாப்பு அமைச்சியுடனான ஒத்துழைப்பின் மூலம், ஓய்வுபெற்ற ஆயுதப்படை (ATM) வீரர்களுக்கு போக்குவரத்து அமைச்சு சுமார் 3,200 வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.
துறைமுகங்கள், தளவாடங்கள், பேருந்து போக்குவரத்து மற்றும் ரயில் துறை ஆகியவற்றில் உள்ள வேலைகள் இந்த வாய்ப்புகளில் அடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறினார்.
“நாங்கள் சரக்கு போக்குவரத்துத் துறையில் – அதாவது லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மீது – கவனம் செலுத்துகிறோம், ஏனெனில் அங்கு பெரும் ஆள் பற்றாக்குறை உள்ளது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இராணுவ வீரர்கள் உதவ வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.”
“துறைமுகத் துறைக்கும் பெரும் ஆற்றல் உள்ளது. துறைமுகங்களில் பல வேலை வாய்ப்புகள் உள்ளன, ஆனால் சில சமயங்களில் நாம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. முன்னாள் இராணுவ வீரர்களுக்கான ஒரு தளம் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும்,” என்று அவர் இன்று இங்குள்ள பிரதமர் அலுவலகத்தில் கூறினார்.
“முன்னாள் இராணுவ வீரர்கள் சங்க (ATM) உறுப்பினர்கள், தங்களோடு ஒழுக்கம், நேர்மை மற்றும் மனவுறுதி யைக் கொண்டு வருவதால், ஓய்வுக்குப் பிந்தைய தெளிவான பாதைகளுடன் அவர்கள் ஓய்வு பெறுவதை உறுதி செய்வது தனது அமைச்சின் பொறுப்பு” என்று லோக் குறிப்பிட்டார்.




