Vimarsagan Media

Home » World » ஜப்பானில் வரலாற்றுத் திருப்பம்: மகப்பேறு விடுப்பு பெற்ற முதல் பெண்

ஜப்பானில் வரலாற்றுத் திருப்பம்: மகப்பேறு விடுப்பு பெற்ற முதல் பெண்

ஜப்பான் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக, பதவியில் இருக்கும் ஒரு மேயர் மகப்பேறு விடுப்பு எடுத்து புதிய சாதனை செய்துள்ளார். மேற்கு ஜப்பானில் உள்ள சுமார் 69,000 மக்கள் தொகை கொண்ட யவதா நகரத்தின் மேயரான ஷோகோ கவாடா எடுத்துள்ள இந்த முடிவு, நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியதோடு அனைத்துலக ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில், தனது 33ஆவது வயதில் ஜப்பானின் மிக இள வயது பெண் மேயராகப் பொறுப்பேற்ற போதே தமக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்ததாக கவாடா தெரிவித்துள்ளார்.

சட்டத்தில் இடமில்லை..யவதா நகர சபை ஊழியர்களுக்கு 16 வாரங்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி உள்ள போதிலும், மேயர் பதவிக்கு அத்தகைய விதிகள் எதுவும் ஜப்பானிய சட்டத்தில் இல்லை. இதனால், கவாடா தனக்கான புதிய நடைமுறை விதியை முறைப்படி உருவாக்க வேண்டியிருந்தது.

இது தொடர்பில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்து நானே மிகவும் ஆச்சரியப்பட்டேன்

Scroll to Top