Vimarsagan Media

Home » World » பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் அண்டி பர்ன்ஹாம் இன்று பதவியேற்கிறார்.

பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் அண்டி பர்ன்ஹாம் இன்று பதவியேற்கிறார்.

கடந்த ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் அண்டி பர்ன்ஹாம்( Andy Burnham) இன்று பதவியேற்கிறார்.

கடந்த ஒரு தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) ஏழாவது பிரதமராகப் பொறுப்பேற்கும் அவர், நாட்டை முழுமையாக மாற்றி அமைக்கப் போவதாகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவி விலகலை செய்ததைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டி பர்ன்ஹாம், மன்னர் சார்லஸைச் சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.

56 வயதான அண்டி பர்ன்ஹாம், இதற்கு முன்பு கிரேட்டர் மான்செஸ்டர் நகரத்தின் மேயராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றவர். பிராந்திய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததால் அவர் ‘King of the North’ (வடக்கின் ராஜா) என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்.

நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்ற வுடன், பிரிட்டனை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார மந்தநிலை, பொதுச் சேவைகளின் நலிவுற்ற நிலை மற்றும் பொதுப் பயன்பாட்டு நிறுவனங் களின் மோசமான செயல்பாடு போன்ற அடுக்கடுக்கான சவால்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

Scroll to Top