Vimarsagan Media

Home » World » அமெரிக்காவில் இந்தியர்கள் அபார புத்தியால் புதியதொரு சாதனை!

அமெரிக்காவில் இந்தியர்கள் அபார புத்தியால் புதியதொரு சாதனை!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அங்குள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற பல்வேறு வழிகளை கையாண்டு வரும் நிலையில், இந்திய வம்சாவளியினர் தங்களின் அபார புத்தியால் புதியதொரு சரித்திர சாதனையைப்படைத்துள்ளனர்.

அமெரிக்காவில், 9,500 கோடி ரூபாய்க்கு மேல் (ஒரு பில்லியன் டாலர்) சந்தை மதிப்பு கொண்ட ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ‘யூனிகார்ன்’ என்று அழைப்பார்கள். இப்படிப்பட்ட பிரமாண்ட நிறுவனங்களை உருவாக்கிய பிற நாட்டுப் பின்னணி கொண்ட தொழிலதிபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அந்தப் பட்டியலில் யாருமே எதிர்பார்க்காத வகையில், இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்து அசுர சாதனை படைத்துள்ளனர்.

அதாவது 96 ‘யூனிகார்ன்’ நிறுவனங்களை தொடங்கி இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில், தொழில்நுட்பத்தில் கில்லாடிகளாகக் கருதப்படும் இஸ்ரேல், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளை எல்லாம் இந்தியர்கள் அசால்ட்டாக பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.

Scroll to Top