தனது இரண்டு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஏற்கனவே 165 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தந்தைக்கு, அவரது மூத்த மகள் சம்பந்தப்பட்ட மேலும் ஏழு பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு களுக்காக, இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்னும் தண்டனை வழங்கப்பட வில்லை.
தண்டனை வழங்குவதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நீதிபதி அஹ்மத் ஃபைசாத் யஹாயா அடுத்த விசாரணைக்காக ஜூலை 21-ஐ நிர்ண யித்தார்.
மே 6 அன்று நடந்த விசாரணை யின் போது, லஹாட் டத்துவில் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரியும் 53 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரிக்கப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண் டார்.
குற்றச்சாட்டுகளின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மார்ச் 19 வரை மாவட்டத் தில் உள்ள பல ஹோட்டல்களில், தற்போது 25 வயதான தனது மூத்த மகளை அந்த நபர் பாலியல் வன் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(3)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதற்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்




