Vimarsagan Media

Home » Malaysia » கோலாலம்பூர் நகராண்மை ஆலோசனைக் குழு உறுப்பினராக எஸ்.தியாகராஜ் நியமனம்

கோலாலம்பூர் நகராண்மை ஆலோசனைக் குழு உறுப்பினராக எஸ்.தியாகராஜ் நியமனம்

கோலாலம்பூர் நகர ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சிறைத்துறை அதிகாரி எஸ். தியாகராஜுக்கு, கூட்டாசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நகரவாசிகளின் நலனுக்காகத் தியாகராஜ் தனது கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வார் என்று தான் நம்புவதாக ஹன்னா தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“முழுமையான நேர்மை, தொழில்முறை அணுகுமுறை மற்றும் அர்ப்பணிப்புடன் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற வாழ்த்துகள்.

“நகர மக்களின் நலனுக்காக மேயருக்குத் தேவையான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி, கோலாலம்பூர் நகர ஆலோசனைக் குழு உறுப்பினராக அவர் தனது பங்கைச் சிறப்பாக நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று ஹன்னா கூறினார்.

இதற்கு முன்னதாக, கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ ஃபட்லுன் மக் உஜுட் (Datuk Seri Fadlun Mak Ujud), தியாகராஜுக்கு நியமனக் கடிதத்தை வழங்கிய நிகழ்வை அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.

Scroll to Top