Vimarsagan Media

Home » Malaysia » சொக்சோவின்- 24 மணிநேரப் பாதுகாப்புக்கான பிடித்தம் என்பது இனி கட்டாயமல்ல.

சொக்சோவின்- 24 மணிநேரப் பாதுகாப்புக்கான பிடித்தம் என்பது இனி கட்டாயமல்ல.

சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (Socso) ‘LINDUNG 24 Jam’ எனப்படும் ‘வேலை தொடர்பானவை அல்லாத விபத்துகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தில்’ (Non-Employment Injury Scheme), ஊழியர்களின் பங்களிப்பு இனி கட்டாயமல்ல என்றும், அது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும் என்றும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்தில் 0.75% பங்களிப்பு செய்வது குறித்துப் பெறப்பட்ட கருத்துகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் முன்வைத்ததைத் தொடர்ந்து, ஜூலை 8 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

‘LINDUNG 24 Jam’ திட்டம், வேலை நேரத்தில் நிகழும் விபத்துகளைத் தாண்டி, வேலை தொடர்பில்லாத விபத்துகளிலிருந்தும் தொழிலாளர் களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.

“பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படை யில், இந்தப் பங்களிப்பு இனி கட்டாய மல்ல, மாறாக விருப்பத்தின் அடிப்படை யிலானது என்று அமைச்சரவை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் முடிவு செய்துள்ளது,” என்று கூறிய ஃபஹ்மி, இந்த முடிவு குறித்த கூடுதல் விவரங்களை மனிதவள அமைச்சு வெளியிடும் என்றும் தெரிவித்தார்

Scroll to Top