Vimarsagan Media

Home » Malaysia » முதல் சுமார் 13,000 பேர் SPM மறுதேர்வு நாளை எழுதுகின்றனர்

முதல் சுமார் 13,000 பேர் SPM மறுதேர்வு நாளை எழுதுகின்றனர்

ஜூலை 14 முதல் 16 வரை நாடு முழுவதும் உள்ள 188 தேர்வு மையங்களில் மொத்தம் 12,974 தேர்வர்கள் 2026-ஆம் ஆண்டிற்கான SPM மறுதேர்வை (SPMU) எழுதவுள்ளனர்.

இத்தேர்வு மலாய் மொழி (Bahasa Melayu), வரலாறு மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சு(MoE) தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், எழுத்துத் தேர்வுகள் மற்றும் மலாய் மொழி செவித்திறன் தேர்வை (Listening Test) மேற்பார்வையிட 1,530 தேர்வுப் பணியாளர்களும், மலாய் மொழி பேச்சுத் தேர்வை (Speaking Test) நிர்வகிக்க 1,366 பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதிகள், நேரங்கள், வினாத்தாள் குறியீடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்த விவரங்களுக்குத் தேர்வு அட்டவணையைப் பார்க்குமாறு அமைச்சு தேர்வர்களுக்கு நினைவூட்டியது.

Scroll to Top