Vimarsagan Media

Home » Malaysia » மித்ரா மற்றும் அது சார்ந்த அமைப்புகள் அடித்தள அளவில் துடிப்புடன் செயல்பட வேண்டும்:- பிரதமர் அன்வார்

மித்ரா மற்றும் அது சார்ந்த அமைப்புகள் அடித்தள அளவில் துடிப்புடன் செயல்பட வேண்டும்:- பிரதமர் அன்வார்

மலேசிய இந்தியச் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தரமான கல்வி, விரிவான சமூக நலன், திறன் மேம்பாடு, சிறந்த வேலைவாய்ப்பு கள் ஆகியவற்றுக்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்தியச் சமுதாயத் தலைவர்களுடனான முக்கியச் சந்திப்பிற்குப் பிறகு, தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன் றில் திரு அன்வார் இதனைத் தெளிவுபடுத்தினார்.

நிதி அமைச்சருமான அன்வார், மித்ரா எனும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மற்றும் அது சார்ந்த அமைப்புகள் அனைத்தும் அடித்தள அளவில் மேலும் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியச் சமுதாய மக்களுடன் அமைப்புகள் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார். கள நிலவரத் திற்கு ஏற்ப மக்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அரசு நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டத்தின் பலன்களும் உண்மையில் உதவி தேவைப்படுவோரு க்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கருணை, பொறுப்புக்கூறல், வெளிப் படையான நல்லாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்துவது மிகவும் அவசியமா னது என்று பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் சமுதாயத்தின் எந்தவொரு பிரிவினரும் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதிசெய்யவே இந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்தார் என்று பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.

Scroll to Top