Vimarsagan Media

Home » India » நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?

தனுஷ் அரசியலுக்கு வந்தால், 2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய் – தனுஷ் இடையே போட்டி நிலவும் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி ஏன் எழுந்தது என்றால், தன் பிறந்த நாளை ஜூலை 28-ஆம் தேதி கொண்டாடிய நடிகர் தனுஷ், அதனை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.அதில் அவர் என்ன சொல்கிறார் என்றால், அடுத்த 2031-தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக – அதிமுக சேர்ந்து வந்து எங்களை எதிர்பார்கள் என்று கணித்திருந்தேன். ஒருவேளை, அடுத்த தேர்தலில் விஜய் சாரை ஜெயிக்கணும்னா, திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க வேண்டும். இது வெறும் திமுகவும் அதிமுகவும் மட்டும் களத்தில் இருந்தால்.

இப்போது சொல்கிறேன், என்னைப் பொருத்தவரை தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டால் திமுக, அதிமுகவே இருக்காது. இரண்டாவது இடத்துக்கு தனுஷ் வந்துவிடுவார். ஒரு கட்டத்தில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் – தனுஷ் என்று போட்டி மாறும் நிலையும் ஏற்படும். அதனை தனுஷ் சார்தான் முடிவெடுக்ணும். அவரது ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறதா என்று சொன்னால், நான் தனிப்பட்ட முறையில் அவரது ஜாதகத்தைப் பார்த்திருக்கிறேன். அவரது ஜாதகம் பற்றி எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to Top