Vimarsagan Media

Home » Malaysia » ரோஹிங்கியா அகதிகள் கட்டம் கட்டமாக ஃபெடரல் பிரதேசம் சிலாங்கூர் மற்றும் பினாங்கு இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் கட்டம் கட்டமாக ஃபெடரல் பிரதேசம் சிலாங்கூர் மற்றும் பினாங்கு இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் நேற்று காவல் தலைமையகத்திலிருந்து விடுவிக்கப் பட்டவர்கள், கட்டம் கட்டமாக ஃபெடரல் பிரதேசம் (Federal Territory), சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ஃபடில் மார்சஸ் புதன்கிழமை (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“அகதிகள் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களுக்கு மாற்றப்பட்டனர்; அவர்களில் பெரும்பாலோர் தங்கள் இலக்கை அடைய ‘இ-ஹெய்லிங்’ (e-hailing) எனப்படும் இணையவழி வாகனச் சேவைகளைப் பயன்படுத்தினர்,” என்று ஆணையர் ஃபடில் கூறினார்.

“அப்பகுதிகளில் உள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் அறிமுகமான வர்களின் இருப்பிடத்தைக் கருத்தில் கொண்டே இந்த இடங்கள் தேர்ந்தெடு க்கப்பட்டன,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மொத்தம் 66 அகதிகள் கோலாலம்பூரி லேயே தங்கவைக்கப் பட்டனர்; அதேவேளையில் 29 பேர் சிலாங்கூரு க்கும், 18 பேர் பினாங்குக்கும் மாற்றப்பட்டனர். பினாங்கில் இருந்த தங்கள் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப் பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 27) அன்று ரோஹிங்கியா அகதிகள் ஜலான் புக்கிட் பெட்டாலிங்கில் (Jalan Bukit Petaling) உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) அலுவலகத்திற்கு வெளியே கூடினர்.

UNHCR அலுவலகத்திற்கு வெளியே 110 ரோஹிங்கியா அகதிகள் கூடியிருந் ததாகக் குறிப்பிட்ட கோலாலம்பூர் ஃபெடரல் பிரதேச குடிவரவுத் துறை, கோலாலம்பூர் காவல் துறையுடன் இணைந்து கூட்டு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தது.

Scroll to Top