ஃபாரஸ்ட் சிட்டி’ (Forest City) வளாகத்தில் செயல்பட்டு வந்த மோசடிக் கும்பல் களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட மிகப்பெரிய சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, குற்றச் செயல்களைத் தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மலேசியச் சட்ட அமலாக்கத் துறையினருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றப்போவதாக அதன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இஸ்கந்தர் புத்திரியில் (Iskandar Puteri) சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கி ணைந்த நடவடிக்கையின்போது அதிகாரிகளுக்குத் தாங்கள் முழுமை யான ஒத்துழைப்பு வழங்கிய தாகவும், அதன் விளைவாக 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்தத் திட்டத்தின் முதன்மை மேம்பாட்டாளர் ஜூலை 29 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“காவல்துறை, உள்துறை அமைச்சு குடிநுழைவுத் துறை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட விரைவான மற்றும் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கை யை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
“சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது.”
எதிர்காலத்தில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அந்த நகர்ப்புற வளாகத்திற்குள்ளேயே நிரந்தரக் காவல் நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்களுக்கும் மேம்பாட்டாளர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.




