மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், தனது மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்தவாறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
ஆகஸ்ட் 10 அன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அன்வார் இரண்டு நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”பிரதமர் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவால் தீர்மானிக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்,” என்று அவரது மூத்த ஊடகச் செயலாளர் நஷ்ருல் அபைதா தெரிவித்தார்.
மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் அல்லது நடைமுறைகளின் தன்மை குறித்த விவரங்களை அந்த அறிக்கை வெளியிடவில்லை.
மேலும், பிரதமரின் மருத்துவப் பரிசோத னைகள் மற்றும் நடைமுறைகள் சுமூகமாக நடைபெறவும், அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்தனை செய்யுமாறு மலேசிய மக்களிடம் அது கேட்டுக்கொண்டது.
“பிரதமரின் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான அனைத்து விஷயங்களும் எளிதாக அமையவும், அவர் தொடர்ந்து நல்ல ஆரோக்கிய த்தைப் பெற்று, இறைவனின் அருளால் விரைவில் தனது கடமைகளுக்கு வழக்கம் போல் திரும்பவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்று நஷ்ருல் கூறினா.




