Vimarsagan Media

Home » Malaysia » சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பிகேஆர்-இன் வோங் சென் விலகல்

சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பிகேஆர்-இன் வோங் சென் விலகல்

பிகேஆர்-ஐச் சேர்ந்த வோங் சென், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் விலகியுள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பதற்காக, கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹரி அப்துலைச் சந்தித்ததாக வோங் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இன்று வரை இது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடக்கூடாது என்று அவருக்கும் ஜோஹரிக்கும் இடையே ஒரு “பரஸ்பர புரிதல் ஒப்பந்தம்” (gentleman’s agreement) இருந்தது.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதி காலியாவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு மூன்று வேலை நாட்கள் அவகாசம் அளிக்கும் வகையிலேயே தனது ராஜினாமா நேரம் அமைக்கப்பட்டதாக வோங் கூறினார்.

“அடுத்த மாதத்திற்குள் எங்களின் அனைத்துத் தொடர்புகளிலிருந்தும் ‘யாங் பெர்போர்மட்’ (Yang Berhormat – மாண்புமிகு) என்ற கௌரவப் பட்டத்தை நீக்கிவிடுவோம்,” என்று கூறிய அவர், புதன்கிழமை காலை 11 மணிக்கு செய்தியாளர் சந்திப்பை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தனது ராஜினாமாவை அறிவிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, புத்தகங்களின் தொகுப்பை ஒரு பெட்டியில் அடுக்கி வைக்கும் 15 வினாடி வீடியோவை அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

வோங் 2013 முதல் 2018 வரை கெலானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராகவும், மே 2018 முதல் இன்று வரை சுபாங் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தார். வோங் சென்னின் ராஜினாமா கடிதத்தின் நகல்; இதனை அவர் இன்று மாலை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார். (ஃபேஸ்புக் படம்)

Scroll to Top