Vimarsagan Media

Home » Malaysia » பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் உடலை அடையாளம் காணபொதுமக்கள் உதவியை கோருகிறது காவல்துறை

பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் உடலை அடையாளம் காணபொதுமக்கள் உதவியை கோருகிறது காவல்துறை

கடந்த வெள்ளிக்கிழமை கோலா கங்சாரில் உள்ள ஜெட்டி லெம்பா அருகே சுங்கை பேராக் ஆற்றில் ஒரு பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது; ஏனெனில், கைரேகை சோதனையில் எந்தவொரு ஒத்த பதிவும் கிடைக்க வில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் காண பேராக் தேசிய பதிவுத் துறை (National Registration Department) மூலமாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், ஆனால் அங்கு அவரது பெருவிரல் ரேகைக்கு இணையான பதிவு எதுவும் கிடைக்கவில்லை என்றும் கோலா கங்சார் மாவட்ட காவல் தலைவர் ஹெய்ஷாம் ஹருன் தெரிவித்தார்.

பல் மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில், அப்பெண் 30- வயதில் இருந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். அவர் 154 செ.மீ உயரமும், சுமார் 48 கிலோ எடையும் கொண்டிருந்தார்; மேலும் அவர் மாநிறமான சருமத்தையும் தோள்பட்டை வரை நீண்ட கருமையான முடியையும் கொண்டிருந்தார்.

“உடல் கண்டெடுக்கப்பட்டபோது, ​​அவர் நீண்ட கை கொண்ட கருப்பு-வெள்ளை கோடுகள் போட்ட சட்டை, கருப்பு ஜீன்ஸ் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார்.

“இந்த உடல் அமைப்புகள் மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள், பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் காண பொதுமக்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Scroll to Top