Vimarsagan Media

Home » Malaysia » இந்தியச் சமூகத்தின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, 19 இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு

இந்தியச் சமூகத்தின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள, 19 இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு

இந்தியச் சமூகத்தின் சமூக- பொருளா தாரச் சவால்களை எதிர்கொள்ள, ‘கெலோம்பாங் சக்ஸாமா’ (Gelombang Saksama) எனப்படும் 19 இந்திய அரசு சாரா அமைப்புகளின் (NGO) கூட்டமைப்பு, ஒரு பிரத்யேகச் சட்டப்பூர்வ அமைப்பு, பொது-தனியார் நிதி திரட்டும் அமைப்பு மற்றும் அமைச்சரவைக் குழு ஆகியவற்றை நிறுவ முன்மொழிந்து ள்ளது.

இக்கூட்டமைப்பின் சார்பில் பேசிய கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, அச்சமூகத்தின் சமூக -பொருளாதார நிலையை மேம்படுத்து வதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் அந்தச் சட்டப்பூர்வ அமைப்பு முக்கிய முகமையாகச் செயல்படும் என்று கூறினார்.

“இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் பின்தங்கிய நிலையைச் சரிசெய்வதற்கும், சமூக-பொருளாதாரச் சூழலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நிர்வகிப்பதற்கும் அந்த அமைப்பே முதன்மைப் பொறுப்புடையதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் இங்குள்ள ஹோட்டல் அர்மடாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

‘கெலோம்பாங் சக்ஸாமா’வில் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் இந்து இளைஞர் அமைப்பு சிலாங்கூர் இந்தியர் ஆலோசனைக் குழு மலேசியத் தெலுங்கு சங்கம் இந்து சேவா சங்கம் மைஸ்கில்ஸ் அறக்கட்டளை தமிழ் அறக்கட்டளை மற்றும் கல்வி, நலன் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை மலேசியா ஆகியவை அடங்கும்.

இந்தியச் சமூகம் மற்றும் அரசாங்கம் ஆகிய இரு தரப்பிலிருந்தும் பங்களிப்புகளைப் பெறும் வகையிலான ‘பொது-தனியார் நிதி திரட்டும் அமைப்பு’ ஒன்றை உருவாக்குவதே இரண்டாவது முன்மொழிவு என்று சாண்டியாகோ கூறினார்.

Scroll to Top