Vimarsagan Media

Home » Malaysia » பினாங்கு நில விற்பனை தொடர்பான விசாரணை:-: முகமைத் தலைவர் – இயக்குநர் தடுப்புக்காவல் நீட்டிப்பு

பினாங்கு நில விற்பனை தொடர்பான விசாரணை:-: முகமைத் தலைவர் – இயக்குநர் தடுப்புக்காவல் நீட்டிப்பு

பினாங்கில் நிலம் விற்பனை செய்யப்பட்டதில் அதிகார துஷ்பிர யோகம் மற்றும் 1.96 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான இழப்பு தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், அரசு முகமைத் தலைவர் மற்றும் நிறுவன இயக்குனர் ஒருவரின் தடுப்புக் காவல் காலம் புதன்கிழமை வரை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘டத்தோ’ (Datuk) பட்டம் பெற்ற, 40 மற்றும் 50 வயதுடைய இவ்விருவரையும் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைப்பதற் கான உத்தரவை மாஜிஸ்திரேட் நூர்ஹனிசா எஸ்.எச். சாஹுல் ஹமீட் பிறப்பித்தார்.

கடந்த வியாழக்கிழமையன்று, அரசு முகமைத் தலைவர், இரண்டு நிறுவன இயக்குனர்கள், தொழில்நுட்ப மேலாளர் மற்றும் பெண் எழுத்தர் என ஐந்து பேர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (MACC) அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்கள் வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் மூவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

2015-ஆம் ஆண்டில் செபெராங் பெராய் செலாத்தானில் ஒரு அமைச்சின் கீழ் இயங்கும் முகமைக்குச் சொந்தமான எட்டு நிலங்களை விற்பனை செய்வ தற்கு ஒப்புதல் அளித்தபோது, ​​அந்த முகமையின் துணைத் தலைவராகவும் இயக்குனர்கள் குழுவின் உறுப்பின ராகவும் இருந்த தலைவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி யதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தை மதிப்பை விட மிகக் குறைந்த விலையில், தனது கூட்டாளிக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு அந்த நிலம் விற்கப்பட்டதாகவும், இதனால் 1.96 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இவ்வழக்கு MACC சட்டம் 2009-இன் பிரிவு 23-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. — பெர்னாமா

Scroll to Top