(Semenyih) விஸ்டா வேலியில் (Vista Valley) உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளியே நிறுத்தப் பட்டிருந்த காரில் ஒரு ஆணும் பெண்ணும் நேற்று சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
48 வயதுடைய அந்த ஆணும் 43 வயதுடைய அந்தப் பெண்ணும் காரின் முன் இருக்கைகளில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காஜாங் (Kajang) காவல் துறைத் தலைவர் நாஸ்ரோன் யூசோஃப் தெரிவித்தார்.
ஒருவருக்கொருவர் அறிமுகமானவர் களான இவர்கள், கடந்த சில நாட்களாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்ததாகவும், வீட்டிற்குத் திரும்ப வில்லை என்றும் கூறப்படுகிறது.
“காவல் துறையினர் எந்தவிதக் குற்றச் செயல்களுக்கான தடயங்களையும் கண்டறியவில்லை. வாகனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகளோ அல்லது பாதிக்கப்பட்ட வர்களின் உடலில் காயங்களோ எதுவும் இல்லை,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று காஜாங் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது; இருப்பினும், ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் வரும் வரை இறப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்பட வில்லை. இச்சம்பவம் ‘திடீர் மரணம்’ (sudden death) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நாஸ்ரோன் கூறினார்.




