Vimarsagan Media

Home » Malaysia » டத்தோ ஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல்மஜிட் புதிய துணை காவல்துறைத் தலைவராக நியமனம்

டத்தோ ஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல்மஜிட் புதிய துணை காவல்துறைத் தலைவராக நியமனம்

புத்ராஜெயா: டத்தோ ஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் மஜித், புதிய துணை காவல்துறைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் திங்கள்கிழமை (செப்டம்பர் 14) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தினார்.

“டத்தோ ஸ்ரீ அப்துல் அஜீஸ் அப்துல் மஜித், 1967-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி பினாங்கின் பெனாகாவில் (Penaga) பிறந்தார். இவர் யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியாவில் (UKM) சமூக அறிவியல் (காவல்துறை ஆய்வுகள்) பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் 1995-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி காவல் படையில் இணைந்தார்.

“அவரது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்திற்கு ஏற்ப, அவர் காவல் துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். நிர்வாகத் துறையின் இயக்குனர், சிறப்புப் பிரிவின் (Special Branch) துணை இயக்குனர், போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குனர், பினாங்கு மாநிலத்தின் துணை காவல்துறைத் தலைவர், நிர்வாகப் பிரிவின் (கொள்கை/வளங்கள்) தலைமை உதவி இயக்குனர் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை உதவி இயக்குனர் ஆகியவை இதில் அடங்கும்.

“காவல்துறைப் பணியில் அவருக்குள்ள நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், துணை காவல்துறைத் தலைவராகப் பணியாற்றுவதற்குத் தேவையான திறனையும் வலுவான தலைமைத்துவப் பண்புகளையும் அவர் கொண்டுள்ளார். அவரது இந்த நியமனத்திற்கு அரசாங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று அவர் கூறினார்

Scroll to Top