Vimarsagan Media

Home » India » இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் இயங்கிய கித்தார் கலைஞர் சதானந்தம் காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் இயங்கிய கித்தார் கலைஞர் சதானந்தம் காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் நீண்டகாலம் பணியாற்றிய பிரபல கித்தார் கலைஞர் சதானந்தம் என்கிற சதா மாஸ்டர் (79), உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

50 ஆண்டுகளாக இசைப் பயணம் மூத்த இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப் பாளராகப் பணியாற்றியவருமான ஏவிஎம் ஆர். சுதர்சனத்தின் மகன் சதானந்தம். சதா மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் திரையிசையில் முன்ன கித்தார் கலைஞராகத் திகழ்ந்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், ‘அன்னக்கிளி’ திரைப்படம் தொடங்கி சுமார் 50 ஆண்டுகளாகப் பல பாடல்களுக்கு கிட்டார் இசை வாசித்துள்ளார். இவரது இசைப் பங்களிப்பு பல புகழ்பெற்ற பாடல்களின் சிறப்பான இசை அமைப்பில் முக்கிய இடம் பெற்றது. ‘செந்தூரப்பூவே’ உள்ளிட்ட பாடல்களில் இவரது கத்தார் இசை ரசிகர்களைக் கவர்ந்தது.

இவரது மறைவு திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இசைக் கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top