எதிர்நோக்கும் மலேசிய ஊடக நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை இறுதி நடவடிக்கையாக வைத்துக்கொள்ள வேண்டும் என தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் வலியுறுத்தியுள்ளார்.
இக்கட்டான சூழலில் அவை அரசாங்கத்திடம் உதவி கோரலாம் என்று சனிக்கிழமை (அக்டோபர் 31) நடந்த செய்தியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனைத் திட்டத் தொடக்க விழாவில் பேசியபோது அவர் தெரிவித்தார்.
உள்ளூர் ஊடக நிறுவனங்களின் நவீனமயமாக்கல், மின்னிலக்க உருமாற்றம், நிலைத்தன்மையை ஆதரிக்கும் ஊடகப் புத்தாக்க நிதிக்கு அரசாங்கம் கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட் (S$ 9 மில்லியன்) ஒதுக்கியுள்ளதாக அவர் அறிவித்தார்.
ஏற்கெனவே 72 ஊடக நிறுவனங்களுக்கு 30 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களால் பாரம்பரிய ஊடகங்களின் விளம்பர வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட அமைச்சர், நிறுவனங்கள் மூடப்படுவதையோ அல்லது ஊழியர்கள் கண்மூடித்தனமாகப் பணிநீக்கம் செய்யப்படுவதையோ தாம் விரும்பவில்லை என்றார்.
“நிதிப் பிரச்சினை இருந்தால் முன்கூட்டியே அணுகுங்கள். அரசு உதவத் தயாராக உள்ளது,” என்று அவர் உறுதியளித்தார்.விழாவில் ஊடகவியலாளர்களுக்கான 4,000 ரிங்கிட் மதிப்பிலான இலவச மருத்துவப் பரிசோதனை வழங்கப்பட்டது.
நாடு முழுவதிலும் உள்ள 12,000க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் ஃபாஹ்மி கேட்டுக்கொண்டார்.




