ஏழை எளிய மக்களுக்கு உதவுவதால் அரசாங்கம் ஏழ்மையடைந்துவிடாது அல்லது திவாலாகிவிடாது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு உண்மையான அச்சுறுத்தல்களாக இருப்பவை தலைவர்களின் முறையற்ற செயல்பாடுகள், ஊழல் மற்றும் நிதி கசிவுகளே ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய வளர்ச்சியின் பலன்கள் மக்களிடையே பரவலாகச் சென்ற டைவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், அதன் ஒரு பகுதியாகவே குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு ‘சும்பாங்கன் அசாஸ் ரஹ்மா’ (SARA) மற்றும் ‘சும்பாங்கன் துனாய் ரஹ்மா’ (STR) ஆகிய உதவித் திட்டங்களுக்காக அரசாங்கம் 16 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதையும், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஆகியவற்றையும் அன்வார் சுட்டிக்காட்டி னார்.
சனிக்கிழமையன்று (அக்டோபர் 31) இங்கு நடைபெற்ற ‘கிளந்தான் தொழில்முனைவோர் மறுமலர்ச்சித் திட்டத்தை’ (Kelantan Entrepreneur Revival Scheme) தொடங்கி வைத்துப் பேசிய அவர், “ஏழைகளுக்கு உதவுவதால் எந்த நாடோ அல்லது அரசாங்கமோ ஏழ்மையடைந்ததில்லை” என்று கூறினார்.




