Vimarsagan Media

Home » Malaysia » புக்கிட் கியாரா வாகன நிறுத்து்ம் இடத்தில் சிசிடிவி கேமராக்கள்

புக்கிட் கியாரா வாகன நிறுத்து்ம் இடத்தில் சிசிடிவி கேமராக்கள்

கோலாலம்பூர், பிப்ரவரி 27 – செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக் புக்கிட் கியாரா பொழுதுபோக்கு பூங்காவில் தனது காரை நிறுத்தி விட்டு போன வேளை கார் கண்ணாடி உடைக்கப் பட்டு காரில் வைத்திருந்த பணம் , கிரேடிட் கார்டு மற்றும் முக்கிய பொருட்கள் களவுப் போனதாக காவல. துறையில். புகார் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து தாமான் பெர்செக்குத்துவான் புக்கிட் கியாரா வாகன நிறுத்துமிடத்தில் மூடிய சுற்று தொலைக்காட்சி (CCTV) கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று நகராண்மை கழகத்தைக் (DBKL) கேட்டுக் கொண்டார்.

.சட்டமன்ற உறுப்பினரின் பொதுப் புகாரையும், பூங்காவில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அவரது திட்டத்தையும் கவனத்தில் கொண்டதாக உள்ளூர் நகராண்மைக்கழகம் இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. “அதன்படி, சிசிடிவி பொருத்தும் பணிகள் ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும், மேலும் மார்ச் 2026 தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது,” என்று அது கூறியது.

Scroll to Top