நாம் தப்பு செய்தால் உடனே எதிர் முனை கேள்வி ‘உனக்கு மூளை இருக்கா இல்லையா’ என சுலபமாக கேட்பார்கள்.! நாம் கோபப்பட்டால் ‘அவன் ஒரு மூளைச் சூட்டுக்காரன்’ என்பார்கள் அற்புதமாக எதையேனும் செய்தால் அவனொரு மூளைக்காரன்டா என்பார்கள்.
நாம் யோசிப்பது, நினைவில் வைத்துக் கொள்வது, உணர்வுகளை கட்டுப்படுத்து வது, உடல் இயக்கங்களை நிர்வகிப்பது போன்ற முக்கிய செயல்களை மூளை செய்கிறது.
மனித உடலில் மொத்த எடையில் மூளை சுமார் 2% மட்டுமே இருந்தாலும், உடலின் மொத்த ஆற்றலின் சுமார் 20% வரை மூளை பயன்படுத்துகிறது. அதனால் தான் அதிகமாக சிந்தித்தால் சோர்வு ஏற்படுகிறது. மூளை சரியாக செயல்பட நல்ல தூக்கம், சத்தான உணவு மற்றும் தண்ணீர் மிகவும் அவசியம். மூளை மனித உடலின் மிக சக்திவாய்ந்த உறுப்பு ஆகும். அதனால் தான் என்னவோ எடுத்தற் கெல்லாம் மூளையைப் பாவி மூளையைப் பாவி என்கிறார்களோ…!




