பொதுப் பல்கலைக்கழகங்கள் செல்வந்தர்களுக்கு இடங்களை விற்பனை செய்வதாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் “பின்வாசல்” வழிகள் மூலம் நுழைந்ததாகவும் கூறிய தனது குற்றச்சாட்டைப் பாதுகாக்க, கெடா சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தை நாடத் தயாராக உள்ளார். மேலும், தனது குற்றச்சாட்டைத் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் சவால்விடும் தொனியில் பேசிய ஹைம் ஹில்மன் அப்துல்லா கூறினார்.
“உயர்கல்வி அமைச்சு் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பினால், நான் தரவுகள், உண்மைகள் மற்றும் ஆதாரங்களுடன் தயாராக வருவேன்,” என்று ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை எழுப்பியபோது தான் பொதுப் பல்கலைக்கழகங்களைத் தாக்கவில்லை என்றும், மாறாக மலேசியர்கள், குறிப்பாக B40 மற்றும் M40 குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் களுக்குக் கல்வி வாய்ப்புகளில் உள்ள நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் சமமான அணுகல் ஆகியவற்றை மட்டுமே கேள்விக்குள்ளாக்கியதாகவும் ஹைம் கூறினார்.
ஜூன் 13 அன்று ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட ஒரு உரையில் ஹைம் கூறிய குற்றச்சாட்டு கள் தொடர்பாக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள், நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி அமைப்பின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும், அத்துடன் முறையான வழிகளில் சேர்க்கை பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் சீர்குலைப்பதாக அமைச்சு கூறியது.




