ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள நெட்வொர்க் பள்ளியின் வணிக உரிமம் மற்றும் வளாகச் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்கள் ஜொகூர் அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன, அதே நேரத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், விசாக்கள் மற்றும் குடிவரவு தொடர்பான பிரச்சினைகள் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார்.
இந்தப் பள்ளி 2024-ஆம் ஆண்டு முதல் ஜொகூரில் நிறுவப்பட்டு, மாநில அரசின் முழு அறிவோடு இயங்கி வருவதாக கோபிந்த் தெளிவுபடுத்தினார். அதன் செயல்பாடு தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும் தேவையான நடைமுறைகளுக்கு ஏற்ப சமர்ப்பிக்கப் பட்டன.
“டிஜிட்டல் அமைச்சகத்தில் உள்ள நாங்கள் ஆய்வு செய்ததில், அனைத்து விண்ணப்பங்களும் சரியாக இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். குடிவரவுத் துறையும் சமீபத்தில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, அனைத்து விண்ணப்பங்களும் தேவையான நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்துள்ளது,” என்று அவர் திங்களன்று இங்குள்ள கம்போங் சுங்கை காயு ஆரா மற்றும் கம்போங் செம்பாகாவில் உள்ள நிலச்சரிவுப் பகுதியை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
சட்டம் அல்லது உரிமம் தொடர்பான ஏதேனும் மீறல் கண்டறியப்பட்டால், அது விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோவிந்த் கூறினார்




