தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியாவும் மியன்மாரும் இணையவழி மோசடிக் கும்பல்களின் முக்கிய மையங்களாக உருவெடுத்து ள்ளன. – சென்ற ஆண்டில் கிழக்காசியா, தென்கிழக்காசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய வட்டாரங்களில் எல்லை தாண்டிய இணையவழி மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் 88.3 பில்லியன் முதல் 114.1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$147.3 பில்லியன்) வரை இழந்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவான 18 பில்லியன் முதல் 38 பில்லியன் டாலர் வரையிலான இழப்புடன் ஒப்பிடுகை யில், இது மூன்று மடங்கிற்குமேல் அதிகம். தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியாவும் மியன்மாரும் இத்தகைய அனைத்துலகக் குற்றக் கும்பல்களின் முக்கிய மையங்களாக உருவெடுத்து உள்ளன.
அங்குள்ள பாதுகாப்புமிக்க வளாகங்களி லிருந்து போலி காதல் வலைகள், மின்னிலக்க நாணய முதலீட்டு மோசடி கள் அரங்கேற்றப்படுகின்றன. பெரும்பாலும் முதலீட்டு மோசடிகள் மூலமே அதிக அளவு நிதி இழப்பு நேரிட்டுள்ளது.
கடந்த ஈராண்டுகளில் சீனா, தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளில்தான் இணையவழி மோசடிகள்மூலம் அதிக நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அம்மூன்று நாடுகளும் பல பில்லியன் டாலரை இணையவழி மோசடிகளில் இழந்துவிட்டதாக ஐநா அறிக்கை குறிப்பிட்டது.
அத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரில் சிலர் தன்விருப்பத்தின் பேரில் செயல் படுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பெரும்பாலார் ஆட்கடத்தல்மூலம் மோசடிக் கும்பலிடம் சிக்கி, இணையவழி மோசடிகளில் ஈடுபடும்படி கட்டாயப் படுத்தப் படுகின்றனர். அவர்கள் உலகம் முழுவதும் உள்ள இணையப் பயனீட்டாளர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றனர்.
அந்த மோசடிக் குழுக்கள் பெருநிறு வனங்களைப் போல ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இது சட்ட அமலாக்க அமைப்புகளுக்குப் பெருஞ்சவாலாக இருப்பதுடன், வட்டார நிலைத்தன்மை க்கும் அச்சுறுத்தலாக விளங்குவதாக ஐநா எச்சரித்துள்ளது




