உணவு விநியோகம் செய்யும் போது காகிதத் துண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பிற்காக, உணவு விநியோக ஓட்டுநரான வாங் ஜிபிங் சீனாவின் உயரிய இலக்கிய விருதான லூ ஷுன் இலக்கியப் பரிசை வென்றுள்ளார்.
நவீன சீன இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படும் எழுத்தாளர் லூ ஷுனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, உணவு விநியோக ஓட்டுநர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்ட அவரது ‘லோ ஃப்ளைட்’ என்ற கவிதைத் தொகுப்பிற் காக அவருக்கு வழங்கப்பட்டது.
கவிதைகள்,கட்டுரைகளுக்காக சமுக ஊடகங்களில் பிரபலம் 2019-ல் உணவு விநியோக ஓட்டுநராகப் பணியாற்றத் தொடங்கிய 56 வயதான வாங், தனது கவிதைகள் மற்றும் கட்டுரைகளுக்காக சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளார்.
பல தசாப்தங்களாகப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்து வந்த கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, வாங் இந்த மதிப்புமிக்க இலக்கிய விருதை வென்றுள்ளார். “நான் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தேன்… மிகவும் பதட்டமாகவும் இருந்தேன்… ஆனால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, எல்லாம் அமைதியானது,” என்று வாங் ஜூலை 15 அன்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.




