தேர்தல் பிரச்சாரத்தின் போது இணையத் தில் பரப்பப்படும், கோலாலம்பூர் மாநகரா ண்மைக் (DBKL) பணியாளர் கட்டமைப்பு குறித்த தவறான தகவல்களால் பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வழியாகப் பரப்பப்பட்ட ஒரு சுவரொட்டியில், டிபிகேஎல்லில் ஒரே ஒரு சீனரும் ஏழு இந்தியர்களும் மட்டுமே பணியில் இருப்பதாகக் கூறப்பட்ட தகவல் பொய்யானது என்றும், அது அந்த உள்ளாட்சி அமைப்பின் உண்மையான பணியாளர் புள்ளிவிவரங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் பிரதமர் துறையின் (கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.
ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, DBKL-இல் 490 இந்தியர்கள் மற்றும் 22 சீனர்கள் உட்பட மொத்தம் 9,131 பணியாளர்கள் பணிபுரிவதாக அவர் குறிப்பிட்டார்.”நிர்வாகம் மற்றும் தொழில்முறைப் பிரிவில், 10 இந்திய அதிகாரிகளும் இரண்டு சீன அதிகாரிகளும் உள்ளனர். “அதே வேளையில், DBKL-இல் உள்ள பிரதிநிதித்துவத்தை இன்னும் மேம்படுத்த முடியும் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிந்து, வெளிப்படையான, நியாயமான மற்றும் தகுதியின் அடிப்படையில் அமைந்த மேம்பாடுகளைச் செயல்படுத்தும் நோக்கில், தனது ஆட்சேர்ப்புத் தரவு, பணியமர்த்தல் நடைமுறைகள், பதவி உயர்வு செயல்முறைகள் மற்றும் வேலைவாய்ப்பு விளம்பர முறைகள் ஆகியவற்றை மறுஆய்வு செய்யுமாறு DBKL-க்கு உத்தரவிட்டுள்ளதாக ஹன்னா கூறினார்.




