ஓர் அமைச்சர் அல்லது அரசாங்க நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவரைப் பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறினார்.
பெரிதா ஹாரியன்’ செய்தி நிறுவனத் தின் தகவலின்படி, ஒழுங்கு நடவடிக்கை மீறல் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் பிரதமருக்குக் கிடைக்கும் பட்சத்தில், அமைச்சர்களோ அல்லது துணை அமைச்சர்களோ பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.
சைபர்ஜயாவில் நடைபெற்ற 104-வது குடிநுழைவுத் துறை தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பேசிய அவர், “நியமனம் செய்வதற்கான அதிகாரம் பிரதமரின் தனிப்பட்ட உரிமையாகும்,” என்று குறிப்பிட்டார்.
“பிரதமருக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தாலோ அல்லது உண்மையான தகவல் கிடைத்தாலோ, அது முழுமையாக அவரது அதிகார வரம்பிற்கு உட்பட்டது; எனவே, யாரும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது




