பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க்கில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்தியபோது, தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் போலீஸார் அவர்களை கலைத்தனர்.
போலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்று கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




