Vimarsagan Media

Home » Malaysia » ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவை அதிகரிப்பதற்காக, கூடுதல்வேன்களைப் பெறுவதற்காகக் காத்திருப்பு:-என்ஜி ஸீ

ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவை அதிகரிப்பதற்காக, கூடுதல்வேன்களைப் பெறுவதற்காகக் காத்திருப்பு:-என்ஜி ஸீ

தனது தேவைக்கேற்ப இயங்கும் போக்குவரத்து ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவை திறனை அதிகரிப்பதற்காக, ரேபிட் கேஎல் கூடுதல் வேன்களைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறது என்று மாநில முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து குழுவின் தலைவர் என்ஜி ஸீ ஹான் கூறினார்.

மாநிலத்தின் பொதுப் போக்குவரத்து மானியத் திட்டத்திற்கான விண்ணப்பங் கள் ஊக்கமளிப்பதாக அவர் குறிப்பிட் டார். “ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவை தொடங்கப்பட்ட வுடன், விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள எஸ்.எம்.கே தாமான் எஸ்.இ.ஏ மற்றும் தாமான் பஹாகியா எல்.ஆர்.டி நிலையத்திற்கு இடையே முன் மொழியப்பட்ட பாதசாரிகள் வழித்தடம் குறித்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர் களிடம் கூறினார்.பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ங் கூறினார்.

இருப்பினும், எதிர்பார்க்கப்படும் கூடுதல் வேன்களின் துல்லியமான எண்ணிக்கை அல்லது அவை எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவை பயனர்களிடமிருந்து, குறிப்பாக நீண்ட காத்திருப்பு நேரம் மற்றும் முன்பதிவுகள் ரத்து செய்யப்படுவது தொடர்பான கருத்துகளையும் புகார்களையும் மாநில அரசு பெற்றுள்ளதாக ங் கூறினார். “இந்தக் கருத்துகள் அனைத்தையும் நாங்கள் ‘ராபிட் கேஎல்’ நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்,” என்று கூறிய அவர், சேவை மேம்பாடுகள் குறித்து ஆலோச னைகள் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மே 12 அன்று, ரேபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவை குறித்த பயணிகளின் கவலைகளை ‘StarMetro’ செய்தி வெளியிட்டிருந்தது. அதில் கடுமையான தாமதங்கள் மற்றும் கணிக்க முடியாத காத்திருப்பு நேரம் காரணமாக நெரிசல் மிகுந்த நேரங்களில் (peak hours) சில பயனர்கள் இச்சேவையைப் பயன்படுத்துவதைக் கைவிட்டது போன்ற சிக்கல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

Scroll to Top