Vimarsagan Media

Home » Malaysia » தேசிய பதிவு இலாகாவில் – வெளி நாட்டினர் பிறப்பைப் பதிவு செய்ய மட்டுமே செல்லலாம்

தேசிய பதிவு இலாகாவில் – வெளி நாட்டினர் பிறப்பைப் பதிவு செய்ய மட்டுமே செல்லலாம்

தேசிய பதிவுத் துறையின் (JPN) சேவை மையங்களில் ஏராளமான வெளி நாட்டினர் காணப்படுவதை ‘மை-காட்’ (MyKad) விண்ணப்பங்களுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை அத்துறை இன்று திட்டவட்டமாக மறுத்தது.

துறையின் சேவை மையங்களுக்கு வரும் அனைவரும் ‘மை-காட்’ பெறவோ அல்லது அதற்கு விண்ணப்பிக்கவோ வருவதில்லை என்றும், வெளிநாட்டின ருக்கான பல்வேறு பதிவு மற்றும் ஆவணச் சேவைகளையும் தாங்கள் வழங்குவதாகவும் JPN தெரிவித்தது.

பெற்றோரின் குடியுரிமை எதுவாக இருந்தாலும், குழந்தைகளின் பிறப்பை JPN-இல் பதிவு செய்வது கட்டாயம் என்பதும் இதில் அடங்கும் என்று அது கூறியது. மேலும், புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்வது தானாகவே மலேசியக் குடியுரிமையை வழங்கிவிடாது என்றும் அது தெளிவு படுத்தியது.

“இளஞ்சிவப்பு நிறப் பிறப்புச் சான்றிதழ்கள் மலேசியாவில் பிறப்பு பதிவு செய்யப்பட்டதற்கான சான்றுகளே தவிர, அக்குழந்தை மலேசியர் என்பதற் கான சான்று அல்ல. இச்சான்றிதழ் மலேசியக் குடியுரிமை பெறாதவர் களுக்கும் வழங்கப்படுகிறது.

“வெளிநாட்டினரை உள்ளடக்கிய பிற சேவைகளையும் JPN வழங்குகிறது; இதில் வெளிநாட்டினருக்கு இடையிலான சிவில் திருமணப் பதிவுகளும் அடங்கும்.

“எனவே, JPN-இல் ஒரு நபர் இருப்பதைக் கண்டு, அவர் அங்கு இருப்பதற்கான உண்மையான நோக்கத்தை அறியாம லேயே அவசரப்பட்டு முடிவுகளுக்கு வந்துவிடாதீர்கள்,” என்று அது தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியது.

நேற்று பரவிய காணொளிகளில், JPN அலுவலகம் ஒன்றில் பல ரோஹிங்கியா அகதிகள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன; அவர்கள் ‘மை-காட்’ பெறுவதற்காகவே அங்கு வந்திருந்ததாக ‘X’ (ட்விட்டர்) பயனர் ஒருவர் அதில் குறிப்பிட்டிருந்தார்

Scroll to Top