பலூன் ஊதியபோது விபரீதம்… தொண்டையில் சிக்கி 6 வயது சிறுவன் பலி இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தை சேர்ந்த துணி வியாபாரி குமார் – சத்யா தம்பதிக்கு 5 குழந்தைகள… இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2 பேர் இரட்டை ஆண் குழந்தைகள் ஆவர்….
இந்நிலையில், குமார் மற்றும் சத்யா வழக்கம்போல் துணி வியாபாரம் முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த அவர்களது 6 வயது மகன் சோமநாத் எதிர்பாராத விதமாக பலூனை விழுங்கியதாகக் கூறப்படுகிறது…
இதனால் பலூன் தொண்டையில் சிக்கி சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ள்ளது. பின்னர், சிறுவன் மயங்கி கீழே விழுந்துள்ளான். மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்




